“என்கிட்ட ஸ்மார்ட்போன் இல்ல, வாட்ஸ் அப் இல்ல... நடிப்பதை நிறுத்திவிட்டால் டிரைவர் வேலைக்கு போவேன்”- ஃபஹத் ஃபாசில்
கடந்த ஓராண்டாக நான் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தவில்லை என நடிகர் ஃபஹத் ஃபாசில் கூறியுள்ளார்.
அண்மையில் ஒரு சேனல் நேர்காணலில் பேசிய நடிகர் ஃபஹத் ஃபாசில், “கடந்த ஓராண்டாக நான் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தவில்லை. சாதாரண பட்டன் போனையே நான் உபயோகிக்கிறேன். இமெயிலில் மட்டும்தான் என்னைத் தொடர்பு கொள்ள முடியும், சமூக வலைதளங்களில் இல்லை. இன்னும் சொல்லபோனால், நான் வாட்ஸ் ஆப்பில் கூட இல்லை. ஒரு நடிகராக ஸ்மார்ட் போன் எனக்கு முக்கியமானதுதான். ஆனால் வேறு வழிகளும் இருக்கின்றன. என் தனிப்பட்ட வாழ்க்கையையோ புகைப்படங்களையோ பொதுவெளியில் பகிர எனக்கு விருப்பம் இல்லை.
ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்துவிட்டால், பார்ஸிலோனாவில் uber ட்ரைவராகிவிடுவேன். மக்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு கொண்டு சேர்ப்பது சுவாரஸ்யமானது. ஒருவர் சென்றடையும் இலக்கை அறிந்துகொள்வது மிக அழகான விஷயம்” என்றார்.