×

உதயநிதி படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகரின் மகள்!

உதயநிதி நடிப்பில் உருவாகவிருக்கும் ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்துள்ளார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி தற்போது நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ‘கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். நடிகை தன்யா ஹோப் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கருப்பன் பட நடிகை தன்யாவும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் குறித்த தற்போதைய அப்டேட்
 

உதயநிதி நடிப்பில் உருவாகவிருக்கும் ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்துள்ளார்.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி தற்போது நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ‘கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். நடிகை தன்யா ஹோப் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கருப்பன் பட நடிகை தன்யாவும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படம் குறித்த தற்போதைய அப்டேட் என்னவென்றால் பிரபல தெலுங்கு நடிகரான ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகர் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகும் ‘அன்பறிவ்’ படத்தின் இணைந்துள்ளதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தற்போது இரண்டாவதாக உதயநிதி படத்தில் இணைந்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ்- உதயநிதி கூட்டணியின் இந்தப் படம் விரைவில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.