×

தமிழ் சினிமாவில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலைத் துவக்கிய மெஹா ஹிட் திரைப்படம்! #14YearsOfSivaji

இன்று ரஜினி நடிப்பில் வெளியாகி மெஹா ஹிட் ஆன சிவாஜி படத்தின் 14 வது ஆண்டு நிறைவு நாள். அதையடுத்து ரசிகர்களை அதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 20017-ம் ஆண்டு வெளியான படம் சிவாஜி. ஷ்ரேயா கதாநாயகியாக நடித்திருந்தார். விவேக், ரகுவரன், மணிவண்ணன், சுமன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஏற்கனவே சந்திரமுகி என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ரஜினி அடுத்த படத்தையும் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தினார்.
 

இன்று ரஜினி நடிப்பில் வெளியாகி மெஹா ஹிட் ஆன சிவாஜி படத்தின் 14 வது ஆண்டு நிறைவு நாள். அதையடுத்து ரசிகர்களை அதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 20017-ம் ஆண்டு வெளியான படம் சிவாஜி. ஷ்ரேயா கதாநாயகியாக நடித்திருந்தார். விவேக், ரகுவரன், மணிவண்ணன், சுமன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

Source : AVM

ஏற்கனவே சந்திரமுகி என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ரஜினி அடுத்த படத்தையும் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தினார். சிவாஜி படத்தை அடுத்து வட இந்திய ஊடகங்கள் கூட ரஜினிகாந்த் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தன. வட இந்திய ஊடகங்கள் முழுவதும் யார் இந்திய சூப்பர் ஸ்டார் என்று விவாதங்கள் நடத்தியது. தமிழில் ஏன் தென்னிந்தியாவில் 100 கோடி வசூலைத் தொட்ட முதல் படம் சிவாஜி தான். தமிழ் சினிமாவின் 4K அறிமுகமான முதல் படமும் சிவாஜி தான்.

வெளிநாட்டில் வேலை பார்த்து கோடீஸ்வரனாக நாடு திரும்பும் ஹீரோ நாட்டின் நிலையைப் பார்த்து தான் சம்பாதித்த பணம் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய முனைகிறார். அதைத் தடுக்கும் வில்லன். அவரை கொலை செய்யும் அளவிற்கு இறங்குகின்றனர். பின்னர் கருப்பு பணம் முழுவதும் பறிக்கப்பட்டு தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களையும் சிங்கப்பூர் லெவலில் மாற்றுகிறார் ஹீரோ.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் விசில் பறந்தது. பராசக்தி ஹீரோ டா, சிவாஜியும் நான்தான், எம்ஜிஆரும் நான் தான் உள்ளிட்ட காட்சிகளில் தியேட்டர்கள் அலறியது. துவண்டு கிடந்த பல தியேட்டர்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்தது சிவாஜி படம் தான்.

ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலும் புல்லரிப்பை ஏற்படுத்தியது. அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் தானே. ஒவ்வொரு பாடலிலும் பிரம்மாண்டம் காட்டியிருந்தார். பல்லேலக்கா பாடல் இந்தியா முழுவதும் ஹிட் ஆனது.

இந்தப் படம் ரஜினிக்கு 10-வது இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. ஸ்டைல் என்றாலே தமிழ் மக்களைப் பொறுத்தவரை ரஜினி தான். சிவாஜி படத்தில் இரு மடங்கு அவரது ஸ்டைல் அதிகப்படுத்தினார் ஷங்கர்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களில் இந்தப் படமும் ஒன்று. தமிழ் சினிமாவை இந்திய சினிமா திரும்பிப் பார்க்க காரணமாக அமைந்த படங்களுள் மிக முக்கியமானது சிவாஜி. தமிழ் சினிமாவின் சிறந்த கமர்ஷியல் ஹிட் படமும் கூட. இன்று சிவாஜி படம் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகின்றனர்.