×

வாத்தி கமிங் ஒத்து… இன்னைக்கு மாஸான மாஸ்டர் அப்டேட் வெளியாகிறது!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் படம், ஊரடங்கு காரணமாக ரிலீஸ்
 

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் படம், ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதையடுத்து படம் குறித்த அப்டேட் வெளியிடுமாறு விஜய் ரசிகர்கள் படக்குழுவை வலியுறுத்தி வருகின்றனர். சோசியல் மீடியாக்களையும் ரணகளப்படுத்தி வருகின்றனர்.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். வெறுமனே அப்டேட் வெளியாகும் என்று மட்டுமே படக்குழு தெரிவித்துள்ளனர். அந்த டீசரா, பாடலா, என்று தெரிவிக்கப்படவில்லை.