×

கவுதம் கார்த்திக், சேரன், சித்தப்பு சரவணன் கூட்டணியில் உருவாகும் கலகல கிராமத்துப் படம்!

கவுதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக ‘தேவராட்டம்’ படம் வெளியாகியது. அதையடுத்து சிம்பு உடன் மப்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவுதம் கார்த்திக் புதிதாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை சிவாத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் இயக்குனர்
 

கவுதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக ‘தேவராட்டம்’ படம் வெளியாகியது. அதையடுத்து சிம்பு உடன் மப்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவுதம் கார்த்திக் புதிதாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை சிவாத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் இயக்குனர் சேரன், சிங்கம்புலி, சித்தப்பு சரவணன், மைனா நந்தினி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஸ்ரீ வாரி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நந்தா பெரியசாமி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். சித்து குமார் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

படத்தின் போஸ்ட்டரை பார்க்கும் போது கடைக்குட்டி சிங்கம் மாதிரியான கலகலப்பான கிராமத்து படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.