×

ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஃபன் பண்ணும் சூரி & முகேன்!

வேலன் படப்பிடிப்புத் தளத்தில் சூரி மற்றும் முகேன் இருவரும் பாடல் பாடி ரகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. சூரி படங்களில் நடிப்பதைப் போல நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவை உணர்வுடனே நடந்துகொள்வார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களிடம் கலாட்டா செய்வது, சமைப்பது என உடன் இருப்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பார். தற்போது வேலன் படப்பிடிப்புத் தளத்தில் முகேன் உடன் பாட்டு பாடி செம பன் செய்த்துள்ளார் சூரி. தென்றல் வந்து தீண்டும் போது பாடலை சூரி பாட முகேன்
 

வேலன் படப்பிடிப்புத் தளத்தில் சூரி மற்றும் முகேன் இருவரும் பாடல் பாடி ரகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

சூரி படங்களில் நடிப்பதைப் போல நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவை உணர்வுடனே நடந்துகொள்வார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களிடம் கலாட்டா செய்வது, சமைப்பது என உடன் இருப்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பார்.

தற்போது வேலன் படப்பிடிப்புத் தளத்தில் முகேன் உடன் பாட்டு பாடி செம பன் செய்த்துள்ளார் சூரி. தென்றல் வந்து தீண்டும் போது பாடலை சூரி பாட முகேன் குறுக்கிட்டு அவர் பாட ஆரம்பிக்க என வீடியோ பார்ப்பதற்கு உற்சாகமாக உள்ளது.

அறிமுக இயக்குனர் கவின் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபு முகேனின் அப்பாவாக நடித்துள்ளார். படத்திற்கான டப்பிங்கைத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

allowfullscreen

இந்தப் படத்தில் தம்பி ராமையா, ஸ்ரீ ரஞ்சனி மற்றும் சுஜாதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இந்தப்ப படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், ஆடியோ, டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.