×

கங்குவா படத்தின் முதல் விமர்சனம்..! 

 

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா ரிலீஸ் தேதியை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இத்திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. முக்கியமாக இந்தப் படம் ரஜினியின் வேட்டையனுக்கு போட்டியாக களமிறங்குகிறது.கிராபிக்ஸ் ஒர்க், போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் ஆகியவற்றையும் அசுர வேகத்தில் கவனித்து வருகிறார் இயக்குநர் சிவா. 

இனி அடுத்தடுத்து கங்குவா டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் போன்ற அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு முன்பாக இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. 

அதாவது பாடலாசிரியர் விவேகா கங்குவா படம் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குநர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... Feeling very proud to be a part of this great film!” என குறிப்பிட்டுள்ளார்.