×

லியோவுக்கு வந்த சவால்... சமாளிக்குமா தி கோட்...? கொதித்து போன விஜய் ரசிகர்கள்

 

தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இந்தி ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபு தேவா , சினேகா , லைலா ,மோகன் , மீனாக்‌ஷி செளதரி , வைபவ் , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. 

தி கோட் படத்திற்கு சென்ஸார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின்  நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் . படம் வெளியான இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்தின் இந்தி ரிலீஸ் குறித்து பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன.




 
படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கப்பட இருக்கின்றன. தி கோட் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் ஒருபக்கம் இருந்து வருகின்றன. அதே நேரம் இந்தியில் படத்திற்கு மிக குறைவாகவே படக்குழு ப்ரோமோஷன் செய்துள்ளது. இதனால் இந்தி டப்பிங்கில் படம் வெளியாக வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன . இதனால் வட மாநிலங்களில் இருக்கும் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். முன்னதாக விஜய்யின் லியோ படம் பான் இந்திய அளவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் படத்திற்கு வட மாநிலங்களில் மிக குறைவாகவே ப்ரோமோஷன் செய்யப்பட்டது. இதனால் படத்தில் இந்தி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது இதே நிலைமை கோட் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. 


தி கோட் படத்தில் இந்தி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வருவதாகவும் சரியான முறையில் ப்ரோமோஷன் செய்தால் படம் நிச்சயம் வட மாநிலங்களில் பெரியளவில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது WeWantGOATHindiInMultiplex என்கிற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  இது குறித்து படக்குழுவினர் என்ன சொல்லப் போகின்றனர் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கல் ஆவலாக காத்திருக்கிறார்கள்.