அக்ஷய் குமாரின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்..!
Updated: Aug 1, 2024, 19:06 IST
‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’வில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்தார். சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு படமான ‘ஸ்கைபோர்ஸ்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருதுபெற்ற கீரவாணி முதலில் இசை அமைப்பதாக இருந்தது. தயாரிப்பாளர் தினேஷ் விஜனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தில் இருந்து கீரவாணி விலகினார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் அந்தப் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஸ்கை போர்ஸ்’ படத்தில் அக்ஷய்குமாருடன் சுனில் ஷெட்டி, நிம்ரத் கவுர், சாரா அலிகான் உட்பட பலர் நடித்துள்ளனர்.