×

நயன்தாரா பல வருஷமா லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பதன் ரகசியம் என்ன!? ஆர்ஜே பாலாஜி பதில்!

நயன்தாரா பல வருடங்களுக்கும் மேல்கா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவதின் ரகசியத்தை ஆர்ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார். மலையாளத்தில் தொகுப்பாளினியாக இருந்த நயன்தாரா தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தனது இரண்டாவது படத்திலே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார் நயன்தாரா. அதன் பிறகு நயன்தாராவின் வளர்ச்சி அசுர வேகத்தில் நகர்ந்தது. தமிழின் முன்னணி ஹீரோக்கள் முதல் வளர்ந்து வரும் சிறு ஹீரோக்கள் வரை பல நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஸ்டார் நடிகையாக
 

நயன்தாரா பல வருடங்களுக்கும் மேல்கா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவதின் ரகசியத்தை ஆர்ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார்.

மலையாளத்தில் தொகுப்பாளினியாக இருந்த நயன்தாரா தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தனது இரண்டாவது படத்திலே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார் நயன்தாரா. அதன் பிறகு நயன்தாராவின் வளர்ச்சி அசுர வேகத்தில் நகர்ந்தது. தமிழின் முன்னணி ஹீரோக்கள் முதல் வளர்ந்து வரும் சிறு ஹீரோக்கள் வரை பல நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஸ்டார் நடிகையாக இருந்தாலும் சிறிய ஹீரோக்களுடனும் தயங்காமல் நடிக்கக் கூடியவர் நயன்தாரா.

தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி அன்று டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

இன்று ட்விட்டரில் ஆர்ஜே பாலாஜி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது “நயன்தாராவுடன் நடிகராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்த போது எப்படி உணர்ந்தீர்கள்” என்று ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த ஆர்ஜே பாலாஜி “என் படத்தோட ஹீரோயின் லேடி ஸ்புர் ஸ்டார் நயன்தாரா 16 வருஷமா எப்படி டாப் இடத்துல இருக்காங்க அப்டினா அவங்களோட டிசிப்பிளின், அவங்களோட டெடிகேஷன், ஒவ்வொரு நாளைக்கும் நாம நம்மளோட வேலையை செமையா பண்ணோம் அப்படிங்கிற அவங்களோட பிடிவாதம். நிறைய பேருக்குத் தெரியுமான்னு தெரியல அவங்க ஒரு பெர்பெக்ஷனிஸ்ட். எந்த விஷயம் பண்றத இருந்தாலும் பாத்து பாத்து பண்ணுவாங்க. மூக்குத்தி அம்மன் ஸ்பாட்-லயும் அவங்கள கேண்டில் பண்றது அவ்ளோ ஈஸியா இருந்தது. இதே மாதிரி இருக்குற பட்சத்துல இன்னும் பல வருஷத்துக்கு அவங்க இதே இடத்துல தான் இருக்கப் போறாங்க” என்று தெரிவித்துள்ளார்.