×

மாமனிதனைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்: காயத்ரி

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படத்தைக் காண ஆவலாக இருப்பதாக காயத்ரி தெரிவித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாமனிதன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், ஷாஜி சென், அனிகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். இதனால், படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவே இந்தப் படத்தைத்
 

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படத்தைக் காண ஆவலாக இருப்பதாக காயத்ரி தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாமனிதன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், ஷாஜி சென், அனிகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். இதனால், படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆனாலும், எப்போது ரிலீஸ் என்ற விஷயம் தெரியாமலேயே இருந்து வருகிறது. OTTயில் படம் ரிலீஸாகுமா? என இயக்குநர் சீனு ராமசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘தயாரிப்பாளர்தான் அதுகுறித்து முடிவுசெய்ய வேண்டும்’ என பதிலளித்தார்.

இந்நிலையில், ஹீரோயினாக நடித்துள்ள காயத்ரியைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி. படத்தை எடிட் செய்த ஸ்ரீகர் பிரசாத், காயத்ரியின் நடிப்பைப் பாராட்டியதாகத் தெரிவித்துள்ள சீனு ராமசாமி, திரையில் அதைப் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள காயத்ரி, தானும் ‘மாமனிதன்’ படத்தைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.