சன்னி லியோனிடம் பேசுவதற்காகவே இந்தி கற்க வேண்டும்.. இயக்குநர் பேரரசு கலகல பேச்சு
பேட்ட ராப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, நடிகை சன்னி லியோனிடம் இரண்டு வார்த்தை இந்தியில் பேச முடியவில்லை, அவரிடம் பேசுவதற்காக இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார்.பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “முன்பெல்லாம் இந்தி தெரியாது போடா என்று சொல்லும்போது நன்றாக இருந்தது. இன்று தான் இந்தி தெரியவில்லையே என்று கவலையாக இருக்கிறது. எனது அருகில் சன்னி லியோன் உட்கார்ந்து இருக்கிறார். ஆனால் அவரிடம் இரண்டு வார்த்தை இந்தியில் பேச முடியவில்லை. சன்னி லியோனிடம் பேசுவதற்காக இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். தமிழை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு பல்வேறு இழப்பைச் சந்திக்க வேண்டியதாக உள்ளது.
பிரபுதேவா சினிமாவில் 30 வருடங்களாக ஹீரோவாக இருக்கிறார் என்றால், அது பெரிய விஷயம் தான். பெரிய கலைஞர்களின் மகன்கள் சினிமாவிற்கு வரும் போது அது அறிமுகத்திற்கு மட்டும் தான் உதவும். ஆனால், பிரபு தேவா தன்னுடைய இடத்தை 30 வருடமாக தக்க வைத்திருக்கிறார் என்றால், அதற்கு அவருடைய திறமை தான் காரணம்” என்று பேசினார். இதனைத் தொடர்ந்து நடிகை சன்னி லியோன் பேசுகையில், “பேட்ட ராப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. கண்டிப்பாக இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும்” என்றார்.