×

தோல்வியைத் தழுவிய காஜல், தமன்னா, கீர்த்தி சுரேஷ்… சமந்தா ஜெயித்துக் காட்டுவாரா!?

கொரோனா காலத்தில் தியேட்டர்கள் முடங்கியதால் ஓடிடி கலாச்சாரம் தழைத்தோங்கத் துவங்கியது. அதன் விளைவாக பல படங்கள் ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்தன. முக்கியமாக நடிகைகள் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள். ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடி-யில் வெளியானது. இந்தப் படம் கூட ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் ‘மிஸ் இந்தியா’, ‘பென்குயின்’ என தான் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த இரு படங்களை ஓடிடி-யில் வெளியிட்டார். அந்த இரு படங்களுமே தோல்வியைத் தழுவின.
 

கொரோனா காலத்தில் தியேட்டர்கள் முடங்கியதால் ஓடிடி கலாச்சாரம் தழைத்தோங்கத் துவங்கியது. அதன் விளைவாக பல படங்கள் ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்தன. முக்கியமாக நடிகைகள் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள்.

ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடி-யில் வெளியானது. இந்தப் படம் கூட ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து கீர்த்தி சுரேஷ் ‘மிஸ் இந்தியா’, ‘பென்குயின்’ என தான் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த இரு படங்களை ஓடிடி-யில் வெளியிட்டார். அந்த இரு படங்களுமே தோல்வியைத் தழுவின.

அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தத் தொடர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது.

அதையடுத்து தற்போது தமன்னா நடிப்பில் ’11 ஹவர்’ என்ற திரைப்படம் ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவும் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

இந்த நிலையில் சமந்தா, ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தின் மூலம் ஓடிடி-யில் என்ட்ரி கொடுக்கிறார். பேமிலி மென் வெப்சீரிஸ் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமந்தா இந்த சீரிஸில் வில்லனாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓடிடி தளம் சமந்தாவுக்கு கை கொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!