×

லாபம் ஓடிடி-யில் அல்ல, மிகப்பெரிய அளவில் தியேட்டரில் வெளியாகும்… விஜய் சேதுபதி!

‘லாபம்’ திரைப்படம் பெரிய அளவில் தியேட்டர்களில் வெளியாகும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘லாபம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்து வந்தார். டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அரசியல் களத்தில் படம் எடுப்பதில் ஜனநாதன் கைதேர்ந்தவர். எனவே லாபம் படத்திலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், விவசாயிகளுக்கும் நடக்கும் போராட்டத்தை நேர்த்தியாக படத்தில் காண்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தான்
 

‘லாபம்’ திரைப்படம் பெரிய அளவில் தியேட்டர்களில் வெளியாகும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘லாபம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்து வந்தார். டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அரசியல் களத்தில் படம் எடுப்பதில் ஜனநாதன் கைதேர்ந்தவர். எனவே லாபம் படத்திலும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், விவசாயிகளுக்கும் நடக்கும் போராட்டத்தை நேர்த்தியாக படத்தில் காண்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு தான் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டது. இந்நிலையில் லாபம் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கிருப்பதாக நேற்று படக்குழுவினர் அறிவித்தனர்.

இதனால் படம் ஓடிடி-யில் வெளியாவதாக பல செய்திகள் எழுந்ததை அடுத்து குழப்பம் ஏற்பட்டது.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள பதிவில் சமூக அரசியல் படமான ‘லாபம்’ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகாது. மிகப்பெரிய அளவில் தியேட்டர்களில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.