×

'மஹாவதார் நரசிம்மா' படத்தை காலணியின்றி பார்த்த ரசிகர்கள்

 

பீகாரில் 'மஹாவதார் நரசிம்மா' படம் ஓடும் திரையரங்கிற்கு வெளியே பார்வையாளர்கள் காலணிகளை விட்டு சென்றனர்.

தற்போது பான் இந்தியா அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் என்றால், அது "மஹாவதார் நரசிம்மா" என்ற அனிமேஷன் படம். இந்தப் படம் கன்னடத்தை விட தெலுங்கு மற்றும் இந்தியில் மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது மற்றும் அபரிமிதமான வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை வரை  10 கோடிக்கு மேல் நிகர வசூல் செய்த இந்தப் படம், இந்தி பதிப்பில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மொத்த வசூலான 79 கோடிகளில் கிட்டத்தட்ட அனைத்தும் இந்தி பதிப்பிலிருந்தே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது