×

தமிழில் ரீமேக் ஆகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’… இயக்குனர் யார் தெரியுமா!?

மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் ஜோ பேபி இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எவ்வளவோ வளர்ச்சியடைந்துவிட்ட இந்த காலத்திலும் பெண்கள் மீது சுமத்தப்படும் பளு, சமயலறையில் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் அவலம் என அழுத்தமான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இயக்குனர் கண்ணன் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைகளை வாங்கியுள்ளார். எனவே இந்தப்
 

மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் ஜோ பேபி இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எவ்வளவோ வளர்ச்சியடைந்துவிட்ட இந்த காலத்திலும் பெண்கள் மீது சுமத்தப்படும் பளு, சமயலறையில் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் அவலம் என அழுத்தமான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது இயக்குனர் கண்ணன் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைகளை வாங்கியுள்ளார். எனவே இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கவுள்ளார்.

“இப்படம் இரண்டு மொழிகளில் உருவாக்கவிருப்பதால் இரு மொழியிலும் பிரபலமான ஒரு நடிகையை நடிக்க வைக்க விரும்புகிறேன். கதாநாயகனும் அப்படிதான் இரு மொழியிலும் பிரபலமான ஒருத்தராக இருக்கவேண்டும். எந்த நடிகர்களை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை. விரைவில் அவற்றை அறிவிப்பேன்.” என்று இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், கண்ணன் அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரது நடிப்பில் தள்ளிப் போகாதே என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கில் நானி மற்றும் நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன நின்னுக்கோரி என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.