×

சர்ச்சையாகும் ‘மாஸ்டர்’ ஓடிடி ரிலீஸ்… விஜய்-க்கு நெருக்கடி…

மாஸ்டர் படம் ஓடிடியில் நாளை மறுநாள் வெளியாகும் என்ற படக்குழுவின் அறிவிப்புக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்த படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் நடித்துள்ள இப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி பொங்கலையொட்டி வெளியானது. திரையரங்குகளில் மாபெரும் வசூலை குவித்து வரும் இப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்து வெளியானது மாஸ்டர் படம். தமிழகம் முழுவதும்
 

மாஸ்டர் படம் ஓடிடியில் நாளை மறுநாள் வெளியாகும் என்ற படக்குழுவின் அறிவிப்புக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்த படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் நடித்துள்ள இப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி பொங்கலையொட்டி வெளியானது. திரையரங்குகளில் மாபெரும் வசூலை குவித்து வரும் இப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்து வெளியானது மாஸ்டர் படம். தமிழகம் முழுவதும் உள்ள 80 சதவீத திரையரங்களில் இப்படம் வெளியானது. வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ்புல்லானது.

இந்நிலையில் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியிடப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோன்று வரும் 29ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் அந்த தளமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மாஸ்டர் நிறுவனம் சொன்ன தேதிக்கு முன்னரே ஓடிடியில் வெளியிட்டால் திரையரங்கங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் என அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். 15 நாட்களுக்கு பிறகு ஒடிடியில் வெளியிட்டால் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆகவே இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திரையங்கங்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.