ஹீரோயினாகிறார் நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா!
Jul 1, 2025, 18:45 IST
மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால்.
Saras, 2018 போன்ற படங்களின் இயக்குநர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் துடக்கம் (Thudakkam) என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால். மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது. நடிகையாவதற்கு முன் விஸ்மயா “Grains of stardust” என்ற கவிதை நூலை வெளியிட்டு இருந்தார். ஏற்கனவே மோகன்லாலின் மகன் பிரணவ் நடிகராக உள்ள நிலையில், மகளும் கதாநாயகியாக களமிறங்குகிறார்.