×

முஃபாசா: தி லயன் கிங் படத்தின் டிரைலர் வெளியீடு

 

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டில் ஒன்றும், 2019 ஆம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது.
இரண்டிலும் ஒரே கதைதான் , 1994 ஆம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும். லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம்.  

<a href=https://youtube.com/embed/o17MF9vnabg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/o17MF9vnabg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

அரச குடும்பத்தை சாராது,அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. தற்பொழுது முஃபாசா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.முஃபாசா காட்டில் இடம் மாறி வருகிறான், அவனை ஸ்கார் காப்பாற்றி தன் ராஜ குடும்பத்துடன் அழைத்துச் செல்கிறான். ஸ்கார் மற்றும் முஃபாசா சகோதரர்களைப் போல் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி அனாதையாக இடம் மாறி ராஜ வம்சத்தில் வந்தடையும் முஃபாசா பின் எப்படி அந்த ராஜாங்கத்தை கைப்பற்றியது என்பதே கதை.ஸ்கார் ஏன் முஃபாசாவிற்கு எதிரியாக மாறுகிறான். இப்படத்தை ஆஸ்கர் விருதை வென்ற ஜெஃப் நதன்சன் எழுத பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.இப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லயன் கிங் படத்தின் ரசிகர்கள் மத்தியில் முஃபாசா: தி லயன் கிங் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.