×

பிக்பாஸ் வின்னரின் இரண்டாவது ஆட்டம் ஆரம்பம்… படத்தின் டைட்டில் வெளியீடு !

பிக்பாஸ் புகழ் முகின் நடிக்கும் இரண்டாவது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3-ல் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகின். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இருக்கும் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனையடுத்து வெப்பம் பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் உருவாகும் ‘வெற்றி’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் முகின். ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி தயாரிக்கும் இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ்
 

பிக்பாஸ் புகழ் முகின் நடிக்கும் இரண்டாவது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3-ல் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகின். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன்‌ இருக்கும் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இதனையடுத்து வெப்பம் பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் உருவாகும் ‘வெற்றி’ என்ற‌ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் முகின். ஶ்ரீதி  நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி தயாரிக்கும் இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு ‌வெளியான ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்ற‌நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது

இந்நிலையில் முகின் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகிவுள்ளது. ‘வேலன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் கவின் இயக்குகிறார். நடிகை மீனாக்‌ஷி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். மேலும் நடிகர்கள் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.