×

சரசரவென்று உருவாகி வரும் முகேன் ராவ் நடிக்கும் படம்!

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவ் வேலன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் கவின் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் படபிடிப்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு டப்பிங் பணிகளைத் துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இயக்குனர் கவின் உறுதியளித்தபடி ‘வேலன்’ படத்தின் முழு வேலைகளையும் சுமூகமாக
 

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவ் வேலன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குனர் கவின் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் படபிடிப்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு டப்பிங் பணிகளைத் துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்கை மேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இயக்குனர் கவின் உறுதியளித்தபடி ‘வேலன்’ படத்தின் முழு வேலைகளையும் சுமூகமாக முடித்து வருவதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை நாங்கள் விரைவில் முடித்துவிடுவோம். ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், ஆடியோ, டிரெய்லர் வெளியீடு மற்றும் தியேட்டர் வெளியீட்டைத் துவங்குவதற்கான சரியான சந்தர்ப்பத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று தயாரிப்பாளர் முபாரக் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா, ஸ்ரீ ரஞ்சனி மற்றும் சுஜாதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இந்தப்ப படத்திற்கு இசையமைத்துள்ளார்.