×

“நெஞ்சம் மறப்பதில்லை” ரிலீஸ் எப்போது ? வெளியான சீக்ரெட் தகவல் !

நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் ஹீரோயின்களாக ரெஜினா, நந்திதா நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே
 

நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் ஹீரோயின்களாக ரெஜினா, நந்திதா நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

படத்தின் ட்ரெய்லரில் எஸ்.ஜே.சூர்யாவின் வெறித்தனமான நடிப்பு ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றது. கடந்த 2017ம் ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய இந்தப்படம் நிதி நெருக்கடி காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. நீண்ட நாள்களாக ரிலீசாகாமல் உள்ள இந்த படம் OTTயில் ரிலீஸ் என தகவல் வெளியானது. அதனை மறுத்து திரையரங்குகளில் தான் படம் வெளிவரும் என படக்குழு உறுதிப்படுத்தியது.

திரையரங்குகளில் தான் படம் வெளியாகும் என உறுதியான நிலையில், மார்ச் முதல் வாரம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிர்காரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.