×

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் புதிய ட்ரைலர் அப்டேட்!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸை ஒட்டி புதிய ட்ரைலர் ஒன்று வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ரெஜினா கசான்ட்ரா மற்றும் நந்திதா இருவர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம்
 

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸை ஒட்டி புதிய ட்ரைலர் ஒன்று வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ரெஜினா கசான்ட்ரா மற்றும் நந்திதா இருவர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படம் 2016-ம் ஆண்டே தயாராகியிருந்தாலும் பல பிரச்னைகள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இறுதியாக வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியாக உள்ளது.

தற்போது படத்தின் ப்ரோமோஷனில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளனர். ஏற்கனவே படத்திலிருந்து பல போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. தற்போதும் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுவரை படத்திலிருந்து மூன்று ட்ரைலர்கள் வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸை ஒட்டி புதிய ட்ரைலர் ஒண்றையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனராம். செல்வராகவன் இயக்கியுள்ள படம் என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.