×

கார்டு விவரங்கள் தேவையில்லை: இரண்டு நாட்களுக்கு இலவசம்… நெட்ஃபிளிக்ஸ் அதிரடி அறிவிப்பு!

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்துள்ளனர். அதை பயனாளர்கள் தங்களின் வங்கி அல்லது கார்டு விபரங்கள் ஏதும் செலுத்தாமலே பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் என்ற பெயரில் இந்த சலுகையை இரண்டு தினங்களுக்கு இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளனர். இந்த சலுகை இந்தியாவில் டிசம்பர் 5 முதல் 6 வரை இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும். பயனாளர்கள் தங்களின், பெயர் ஈமெயில் முகவரி கொடுத்து நெட்ஃபிளிக்ஸ் கணக்கு தொடங்கினால் மட்டும் போதும். இரண்டு
 

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்துள்ளனர். அதை பயனாளர்கள் தங்களின் வங்கி அல்லது கார்டு விபரங்கள் ஏதும் செலுத்தாமலே பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ரீம்ஃபெஸ்ட் என்ற பெயரில் இந்த சலுகையை இரண்டு தினங்களுக்கு இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளனர்.

இந்த சலுகை இந்தியாவில் டிசம்பர் 5 முதல் 6 வரை இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும். பயனாளர்கள் தங்களின், பெயர் ஈமெயில் முகவரி கொடுத்து நெட்ஃபிளிக்ஸ் கணக்கு தொடங்கினால் மட்டும் போதும். இரண்டு நாட்களுக்கு இலவசமாகப் பார்த்துக் கொள்ளலாம். கார்டு விவரங்கள் கொடுக்கத் தேவையில்லை.

“இந்த ஐடியா மக்களிடம் எந்தளவிற்கு வரவேற்பு பெற உள்ளது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளோம். இது எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்போம். ஒரு நாட்டில் உள்ள அனைவருக்கும் தங்கள் வார இறுதியில் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு பலரை ஈர்க்கும் என்று நம்புகிறோம். உண்மையிலேயே ஒரு சாதனை நிகழ்வை உருவாக்கியுள்ளோம். மக்கள் பலர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பதிவு செய்யவார்கள் என்று நம்புகிறோம்” என நெட்ஃபிளிக்ஸ் சிஓஓ கிரெக் பீட்டர் தெரிவித்துள்ளார்.

ஸ்ட்ரீமிங் தளங்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் பயனர்களை ஈர்க்க இந்தியாவில் மட்டும் மாதம் ரூ.199-க்கு மொபைலில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தை அணுகும் வசதியை அறிவித்திருந்தனர். தற்போது அறிவித்துள்ள இரண்டு நாட்கள் சலுகையால் இன்னும் அதிக பயனர்கள் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.