×

நீண்ட இழிப்பறியில் இருந்த திரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’… நேரடியாக ஓடிடிவில் வெளியாகிறது…

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் திரிஷா. இவர் நடித்து வெளிவரவிருக்கிற படம் ‘பரமபதம் விளையாட்டு’. கதாநாயகியை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. திருஞானம் இயக்கும் இப்படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், ஏ.எல்.அழகப்பன், வேலராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம்
 

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் திரிஷா. இவர் நடித்து வெளிவரவிருக்கிற படம் ‘பரமபதம் விளையாட்டு’. கதாநாயகியை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. திருஞானம் இயக்கும் இப்படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், ஏ.எல்.அழகப்பன், வேலராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரானா பரவல் காரணமாக வெளியிடப்படவில்லை. தற்போது நேரடியாக இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்காக ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதால் வரும் தமிழ்ப் புத்தாண்டுக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.