×

கணேஷ் வெங்கட்ராமனுக்கு ஜோடியான பார்வதி நாயர்!

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கவிருக்கும் படத்தில் பார்வதி நாயர் இணைந்துள்ளார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தமிழில் திறமையான துணை நடிகராக இருந்து வருகிறார். இவரை துடிப்புமிக்க போலிஸ் அதிகாரியாக நாம் பல படங்களில் பார்த்திருப்போம். அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் உன்னைப்போல் ஒருவன், கோ, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும் ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. பின்னர் பிக்பாஸ் முதலாவது
 

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கவிருக்கும் படத்தில் பார்வதி நாயர் இணைந்துள்ளார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தமிழில் திறமையான துணை நடிகராக இருந்து வருகிறார். இவரை துடிப்புமிக்க போலிஸ் அதிகாரியாக நாம் பல படங்களில் பார்த்திருப்போம். அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் உன்னைப்போல் ஒருவன், கோ, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும் ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

பின்னர் பிக்பாஸ் முதலாவது சீசனில் கலந்துகொண்ட பிறகு தமிழக மக்களிடையே பிரபலமானார்.

தற்போது ‘உன் பார்வையில்’ என்ற படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் கதாநாயகனாக நடித்து வருகிறார். பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் வெர்ஷனில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். நடிகை பார்வதி நாயர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.