×

நயன்தாரா படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு…

நயன்தாராவின் தயாரிப்பில் உருவான கூழாங்கல் படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். நயன்தாரா-விக்னேஷ் சிவன் சொந்த நிறுவனமான ‘ரௌடி பிக்சர்ஸ்’ தயாரித்துள்ள படம் ‘கூழாங்கல்’. அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இந்த இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் அயலாந்து நாட்டில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு போட்டியிட்டது. இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படமான கூழாங்கல் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டது. இதையடுத்து இந்த படம் சர்வதேச
 

நயன்தாராவின் தயாரிப்பில் உருவான கூழாங்கல் படத்திற்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் சொந்த நிறுவனமான ‘ரௌடி பிக்சர்ஸ்’ தயாரித்துள்ள படம் ‘கூழாங்கல்’. அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இந்த இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த படம் அயலாந்து நாட்டில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு போட்டியிட்டது. இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படமான கூழாங்கல் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டது. இதையடுத்து இந்த படம் சர்வதேச விழாவில் கடந்த 7ம் தேதி திரையிடப்பட்டது. இதில் நல்ல விமர்சனங்களை பெற்று ‘டைகர்’ பிரிவில் பரிசை தட்டிச் சென்றது. சர்வதே விழாவில் விருது வென்ற கூழாங்கல் படத்திற்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது வலைத்தளத்தில் கூழாங்கல் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் கூழாங்கல் படத்திற்கு ‘டைகர்’ விருது கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நம் திரையுலகை சார்ந்த ஒருவர் தனது திறமையால் இந்த விருதினை பெறுவது சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்று கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.