×

தயவுசெய்து ஒரு ஓரு தலைமுறையைக் கொன்று விடாதீர்கள்”… புத்தம் புது காலை பட இயக்குனர்களைச் சாடிய பிரபல நடிகர்!

ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நட்ராஜ் புத்தம் புது காலை படம் குறித்து முடியலடா சாமி என்று பதிவிட்டுள்ளார். சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய ஐந்து இயக்குனர்கள் இயக்கத்தில் ‘புத்தம் புது காலை’ என்ற அந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த பெரும்பாலானோர் படத்தின் மீது எதிர்மறையான விமர்சனங்களையே முன் வைக்கின்றனர். ஏற்கனவே அந்தப் படத்தில்
 

ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நட்ராஜ் புத்தம் புது காலை படம் குறித்து முடியலடா சாமி என்று பதிவிட்டுள்ளார்.

சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய ஐந்து இயக்குனர்கள் இயக்கத்தில் ‘புத்தம் புது காலை’ என்ற அந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

படம் பார்த்த பெரும்பாலானோர் படத்தின் மீது எதிர்மறையான விமர்சனங்களையே முன் வைக்கின்றனர். ஏற்கனவே அந்தப் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த ‘மிராக்கிள்’ பகுதி தன்னுடைய குறும்படத்தைக் காப்பி அடித்து எடுத்தது என எழுத்தாளர் அஜயன் பாலா புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நட்ராஜ் புத்தம் புது காலை படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் “புத்தம் புது காலை… ஆக கொடுமை….வாழ்த்துக்கள்….தாங்க முடியலடா சாமி…” என்று கூறியுள்ளார்.

மேலும் “ஆக சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவகர்களுக்கு இடம் கிடைக்காது..நீங்கள் தோல்வியுற்ற நெறிமுறைகளைப் பாருங்கள் … மற்றவர்களுக்கு நிரூபிக்க அதிக நேரம் எடுக்கும் … தயவுசெய்து ஒரு ஓரு தலைமுறையைக் கொன்று விடாதீர்கள்… வருபவர்களுக்கு இடம் கொடுத்து இடத்தைப் பெறுங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் இயக்கியிருந்த படம் மக்களை மகிழ்விக்க தவறி விட்டது. அதனால் வரும் இளம் தலைமுறையினருக்கு இடம் கொடுங்கள் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது.