×

கொரோனாவை அடிச்சு துவைச்சாச்சு… உற்சாகத்தில் பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே தான் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா சென்றிருந்த போது தான் கொரோனவால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் “உங்களுடைய எல்லா அன்பிற்கும் நன்றி. நான் தற்போது நலமாக இருக்கிறேன். கொரோனாவை எட்டி உதைத்து இறுதியாக அதிலிருந்து மீண்டுள்ளேன். ஆம்! உங்கள் எல்லா வாழ்த்துக்களும். ஒரு மேஜிக் போல
 

நடிகை பூஜா ஹெக்டே தான் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா சென்றிருந்த போது தான் கொரோனவால் பாதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் “உங்களுடைய எல்லா அன்பிற்கும் நன்றி. நான் தற்போது நலமாக இருக்கிறேன். கொரோனாவை எட்டி உதைத்து இறுதியாக அதிலிருந்து மீண்டுள்ளேன். ஆம்! உங்கள் எல்லா வாழ்த்துக்களும். ஒரு மேஜிக் போல செயல்பட்டு என்னை குணப்படுத்தியுள்ளது. உங்களுக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படப்பிடிப்பிற்காக சென்னையில் ஒரு பெரிய ஷாப்பிங் மால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். மலையாள நடிகை அபர்ணா தாஸ், ஷினே டாம் சாக்கோ, யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.