×

பிரபல டிவி தொகுப்பாளர், எஸ்பிபி இறுதி சடங்கில் கலந்து கொள்ளாததற்கு அஜித்தை சாடினாரா!?

பிரபல டிவி தொகுப்பாளரான சுமந்த் சி ராமன், எஸ்பிபி-ன் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாததற்காக பிரபல நடிகரைச் சாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாடும் நிலா எஸ்பிபி மறைவை அடுத்து இந்தியா முழுதும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மறைந்த எஸ்பிபி, சனிக்கிழமை அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டார். திரையுலக பிரபலங்கள் பலர் அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தியது
 

பிரபல டிவி தொகுப்பாளரான சுமந்த் சி ராமன், எஸ்பிபி-ன் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாததற்காக பிரபல நடிகரைச் சாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாடும் நிலா எஸ்பிபி மறைவை அடுத்து இந்தியா முழுதும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மறைந்த எஸ்பிபி, சனிக்கிழமை அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டார். திரையுலக பிரபலங்கள் பலர் அவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தியது பலரது மத்தியில் பாராட்டைப் பெற்றது. பல நடிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நடிகர் அஜித் எஸ்பிபி மறைவு குறித்து இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

எஸ்.பி.பி. மகன் சரணும், அஜித்தும் ஒரே பள்ளியில் தான் படித்தார்கள். எனவே இருவரும் நெருங்கிய நண்பர்கள். சரண் குடும்பத்தினருடன் அஜித் எப்போதும் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.

அஜித் தரப்பில் இதுகுறித்து விசாரித்த போது “நேரில் பேசிவிட்டார் அஜித். அப்புறம் எதற்கு அறிக்கை? யாருக்கு ஆறுதல் சொல்ல வேண்டுமோ, யாருக்கு இரங்கல் சொல்ல வேண்டுமோ அவர்களுக்கு சொல்லிவிட்டார். பிறகு எதற்கு அறிக்கை? யாருக்கு அறிக்கை?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது டிவி தொகுப்பாளரான சுமந்த் சி ராமன் வெளியிட்டுள்ள பதிவில் “நடிகர் விஜயை விட எஸ்பிபி-யால் பல மடங்கு பயனடைந்த நடிகர்கள் விலகியிருந்த பொழுது விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது மனதைக் கவர்கிறது. அவருக்கு உண்மையாக மரியாதை அளிக்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

எஸ்பிபி-யால் அதிகம் பயனடைந்தவர் என்று சுமந்த் குறிப்பிட்டது நடிகர் அஜித்தை தான் என்று சிலர் கருதி அவருக்கு எதிர்ப்புக் குரல் தெரிவித்து வருகின்றனர்.