`சீதா ராமம்' பட இயக்குனருடன் இணையும் பிரபாஸ்
Aug 18, 2024, 12:00 IST
நாக் அஷ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் பிரபாஸ் நடித்து இருந்தார். இப்படம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் பாராட்டை பெற்றது. இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன், அன்னா பென் மற்றும் பலர் நடித்து இருந்தனர்.அடுத்ததாக பிரபாஸ் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கவுள்ளார். இதற்குமுன் ஹனு ராகவபுடி மிகப்பெரிய வெற்றி திரைப்படமான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகுர் நடித்த சீதா ராமம் திரைப்படத்தை இயக்கியவராவார்.