×

பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள சத்திய சோதனை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

பிரேம்ஜி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘சத்திய சோதனை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், பிரேம்ஜி சத்திய சோதனை என்ற படத்தில் நடித்துள்ளார். ரேஷ்மாவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல்நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி ஒரு காமெடி கதையை தயார் செய்திருக்கிறார் சுரேஷ் சங்கையா. ரகுராம் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். Super Talkies and Touchwood Studios நிறுவங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
 

பிரேம்ஜி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘சத்திய சோதனை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், பிரேம்ஜி சத்திய சோதனை என்ற படத்தில் நடித்துள்ளார். ரேஷ்மாவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல்நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி ஒரு காமெடி கதையை தயார் செய்திருக்கிறார் சுரேஷ் சங்கையா.

ரகுராம் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். Super Talkies and Touchwood Studios நிறுவங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். போஸ்டரில் பிரேம்ஜி. சில போலீசுக்காரர்கள் மற்றும் ஒரு பாட்டி என நகைச்சுவையாக தோற்றமளிக்கிறது.

இயக்குனர் சுரேஷ் சங்கையா ஏற்கனவே விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியா ஆகியோர் நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை என்பவர் இயக்கியிருந்தார். அந்தப் படம் மக்களிடையே விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.