×

காற்றில் கலர்புல்லாக ரிலாக்ஸ் செய்யும் பிரியா பவானி ஷங்கர்! காரணம் காதலா..?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரமாக பயணிக்க ஆரம்பித்தார். தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை கைப்பற்றி இருக்கும் இவர் தற்போது இந்தியன் 2 , பெல்லி சூபுளு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இவர் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இவர்களுக்குள் காதல்
 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரமாக பயணிக்க ஆரம்பித்தார்.


தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை கைப்பற்றி இருக்கும் இவர் தற்போது இந்தியன் 2 , பெல்லி சூபுளு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இவர் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இவர்களுக்குள் காதல் கசமுசா ஏதேனும் இருக்குமோ என வதந்தியை கிளப்பினர். நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் பிரியா பவானி சங்கர் பார்க்கில் அமர்ந்துக் கொண்டிருப்பதைப் போன்ற அந்த புகைப்படம் பயங்கர வைரலானது.

பின்னர் இவர்கள் இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருப்பது தெரியவந்தது .மேலும் அந்த புகைப்படம் படத்தில் வரும் ஒரு காட்சியாக இருக்கலாம் எனவும் முணுமுணுக்கப்பட்டது.

இதற்கு ஏற்றார் போல் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காதல் பதிவை பதிவிட்டு இருந்தார் அதில் “கடைசியாக எங்களுக்கு மகிழ்ச்சி” என எழுதப்பட்டிருந்தது. பின்னர் இதற்கு பதில் அளித்த பிரியா,அந்த பதிவு தங்களது திரைப் படத்திற்கான பிரமோஷன் என சுதாரித்துக் கொண்டார்.

தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி போட்டோக்கள் பத்தியம் பிரியா பவானி ஷங்கர், தற்போது காற்றில் தான் ரிலாக்ஸ் செய்வது போன்று சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இவை பார்ப்பதற்கு கலர்புல்லாக இருக்கிறது.