×

குட்டி லவ் ஸ்டோரி…. நான்கு பிரபல இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் அந்தாலஜி படம்!

தமிழில் நான்கு பிரபல இயக்குனர்கள் இயக்கும் லவ் அந்தாலஜி படமான ஒரு குட்டி ஸ்டோரி படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தற்போது அந்தாலஜி படங்கள் எடுப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் அந்தாலஜி படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது தமிழிலும் அவை அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கும் அந்தாலஜி படம் நெட்பிலிக்சில் வெளியாக இருக்கிறது. தமிழிலும் சில அந்தாலஜி படங்கள் வெளியாகியுள்ளன. சில்லுக்கருப்பட்டி
 

தமிழில் நான்கு பிரபல இயக்குனர்கள் இயக்கும் லவ் அந்தாலஜி படமான ஒரு குட்டி ஸ்டோரி படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தற்போது அந்தாலஜி படங்கள் எடுப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் அந்தாலஜி படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது தமிழிலும் அவை அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கும் அந்தாலஜி படம் நெட்பிலிக்சில் வெளியாக இருக்கிறது. தமிழிலும் சில அந்தாலஜி படங்கள் வெளியாகியுள்ளன. சில்லுக்கருப்பட்டி படம் கூட அந்தாலஜி வகை தான்.

தற்போது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கவுதம் மேனன். ஏஎல் விஜய், நலன் குமாரசாமி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இயக்கும் லவ் அந்தாலஜி படத்தில் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் ஒவ்வொரு இயக்குநர்களும் அவர்களின் குரலில் அவரவர் கதைகளை கூறியுள்ளனர்.  இந்தப் படத்திற்கு கார்த்திக் என்பவர் இசையமைத்துள்ளார்.