×

ஃபஹத் பாசில் பிறந்தநாள் : புஷ்பா 2 படத்தின் மாஸான போஸ்டர் வெளியானது..!
 

 

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 6 ஆம் தேதி-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஃபகத் ஃபாசிலிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஃபகத் ஃபாசில் புஷ்பா திரைப்படத்தில் பன்வர் சிங் ஷேகாவத் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். போஸ்டரில் லுங்கி அணிந்துக் கொண்டு ஒரு கையில் கோடாரியும் மற்றொரு கையில் துப்பாகியுடன் மிகவும் மாஸான லுக்கில் காணப்படுகிறார்.