×

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவுக்கு பதில் இவரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இருந்து சமந்தா விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். இதனால் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டது.அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா..சேச்சி என்றெல்லாம் அழைத்ததாக பேசப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் தன்னை வெறும் டம்மி யாக பயன்படுத்துவதைப்போன்று உணர்த்த சமந்தா , ”விடுங்கடா
 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இருந்து சமந்தா விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். இதனால் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டது.அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா..சேச்சி என்றெல்லாம் அழைத்ததாக பேசப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பில் தன்னை வெறும் டம்மி யாக பயன்படுத்துவதைப்போன்று உணர்த்த சமந்தா , ”விடுங்கடா சாமி என குமுடு போட்டுவிட்டு விலகுவதாக சொல்லிவிட்டாராம். இதனால் அவருக்கு பதிலாக இடம்பிடிக்க சில நாயகிகள் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றனராம்.

இந்நிலையில் சமந்தாவுக்கு பதில் ராஷ்மிக்கா இடம்பிடிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.