×

ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஜண்ட் சரவணனைச் சந்தித்த ரஜினிகாந்த்… வைரலாகும் புகைப்படம்!

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜென்ட் சரவணன் இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேளா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் இந்தப் படத்தில் இடம் பெருகின்றனர். இந்தப் படம் பெரிய பொருட்செலவில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திலிருந்து
 

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜென்ட் சரவணன் இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேளா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் இந்தப் படத்தில் இடம் பெருகின்றனர். இந்தப் படம் பெரிய பொருட்செலவில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்திலிருந்து சரவணன் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தைக் கலக்கின. அதையடுத்து சில தினங்களுக்கு முன்பு மணாலியில் ஊர்வசியுடன் ரொமான்ஸ் செய்யும் பாடல் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆகின.

தற்போது இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் சரவணனும் நடிகர் ரஜினிகாந்தும் சந்தித்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் சென்று ரஜினிகாந்த் அவரைச் சந்தித்துள்ளார். இருவர் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடைபெற்று வருவதால் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.