×

அரசியல் அறிவிப்பு அண்ணாத்த படத்தைப் பாதிக்குமா? ரஜினி பதில்!

பல ஆண்டுகளாக விடை தெரியாமல் இருந்து வந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம், ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் என்று அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லைனா எப்பவும் இல்ல என பதிவிட்டதுடன், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான,
 

பல ஆண்டுகளாக விடை தெரியாமல் இருந்து வந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம், ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் என்று அவரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லைனா எப்பவும் இல்ல என பதிவிட்டதுடன், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்” என்று பதிவிட்டிருந்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாகக் காத்திருந்த அவரது உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் ஆகியோருடன் திரைத்துறை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும், ரஜினி அரசியல் அறிவிப்பு தற்போது அவர் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த ரஜினி “அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுப்பது எனது கடமை” என்று தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் முழு கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் பாதிக்கு மேல் படப்பிடிப்பு மீதமுள்ளதாம்தாம். சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தையும் காலமானது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் எப்போது திரும்புவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதிஷ், வேல ராமமூர்த்தி, பிரகாஷ் ராஜ், ஜார்ஜ் மரியான் என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.