ஜூலை 18ம் ரீ ரிலீஸாகிறது ‘பாட்ஷா’ திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்தை கொண்டாடும் வகையில் வரும் ஜூலை 18ம் தேதி ‘பாட்ஷா’ திரைப்படம் ரீ ரிலீஸாகிறது.
1995 இல் சுரேஷ் கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘பாட்ஷா’. கொள்ளையர்கள் பற்றிய அதிரடி தொடர்பான இத்திரைப்படத்தில் இரசினிகாந்து, நக்மா, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். சனகராஜ், தேவன், சசி குமார், விஜயகுமார், ஆனந்தராஜ், சரண்ராஜ், கிட்டி, சத்தியப்பிரியா, செண்பகா, யுவராணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் கதை ஆட்டோ ரிக்சா ஓட்டுநரைச் சுற்றி வருகிறது. அவர் அவருடைய குடும்பத்தின் ஓர் இருண்ட கால வாழ்க்கையை மறைத்து, வன்முறையைற்ற, ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்வதைக் குறிப்பிடுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்தை கொண்டாடும் வகையில் வரும் ஜூலை 18ம் தேதி ‘பாட்ஷா’ திரைப்படம் ரீ ரிலீஸாகிறது.