கூல் கேர்ள் ராஷ்மிகா! ராஷ்மிகாவின் டைரியில் இடம்பெற்றுள்ள டாப் 10 ஃபேவரட் விஷயங்கள்
நடிகை ராஷ்மிகா மந்தனா அவருடைய ஸ்பெஷல் டைரியில் இடம்பெற்றுள்ள முக்கியமான விஷயங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. உலகளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் நேஷனல் க்ரஷ் என செல்லமாக அழைக்கப்படுகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட்டில் சினிமாவிலும் அறிமுகமாகி அங்கும் கலக்கி வருகிறார். கீதா கோவிந்தம் படம் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்ற ராஷ்மிகாவுக்கு 'புஷ்பா' படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. தற்போது 'புஷ்பா 2 ' படத்திலும் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து வருகிறார். அது தவிர பல இந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் 'சுல்தான்' , விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் அவரை பார்க்க முடியாவிட்டாலும் இந்தியில் படு பிஸியாக இருக்கிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது போஸ்ட் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில் 'டியர் டைரி' என்ற தலைப்பில் தனக்கு பிடித்தமான 10 விஷயங்களை பகிர்ந்து அது இல்லாமல் அவரது வாழ்க்கையில் எதுவுமே இல்லை என குறிப்பிட்டுள்ளார். எனக்குள் இருக்கும் நடிகையை எப்படி ரசிகர்கள் பார்க்கிறார்களோ அதே போல என்னுடைய நண்பர்களும் பேமிலியும் ராஷ்மிகாவின் இந்த பகுதியை தான் பார்த்துள்ளார்கள். என்னுடைய லிஸ்டில் நல்ல உணவு, கொண்டாட்டம், நல்ல தூக்கம், நல்ல புத்தகம், ட்ராவல், ஸ்வீட் ட்ரீட்,காபி, குட்டி தங்கை, வேலை இவை இல்லாமல் நானில்லை. இவை என்றுமே எனக்கு மகிழ்ச்சி தர கூடியவை என பதிவிட்டு இருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. ராஷ்மிகாவின் இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.