×

புஷ்பா 2  ஷூட்டிங் : அந்த ஒரு ஸ்டெப்புக்கு மட்டும் பல மணி நேரம் ரீடேக்-  ராஷ்மிகா மந்தனா!

 

அல்லு அர்ஜுனின் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து பாடல் டிரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளார். இப்படம் குறித்து பேசிய ராஷ்மிகா, 'Sooseki’ பாடலில் வரும் ஒரே ஸ்டேப்புக்காக இயக்குநர் பல டேக்குகளை எடுத்தாக கூறியுள்ளார்.டோலிவுட் பிரபலம் அல்லு அர்ஜுன், தென்னிந்திய குயின் ராஷ்மிகா மந்தனா, மிரட்டல் வில்லன் பகத் பாசில் என உச்சகட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தைன் சுகுமார் இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் படம் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது.


இயக்குநர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, படத்தின் எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.  இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தியன் ஐடல் தெலுங்கு சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்துனராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் புஷ்பா 2 வில் வரும் 'Sooseki’ நடன ஸ்டெப்பை செய்து காட்டும் ரசிகர்கள் கேட்க இதை செய்து காட்டிய ராஷ்மிகா, அந்த பாடலை படமாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. கேமரா லென்ஸுடன் வரும் அந்த கை அசைவு காட்சிக்காக மட்டும் பல மணிநேரம் பல டேக்குகள் ஆனது என கூறியிருந்தார். ரசிகர்கள் ராஷ்மிகா பேசியதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.