பூர்ணிமா பாக்யராஜை ரீகிரியேட் செய்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி….
மார்டன் உடையோ, புடவையோ எப்போதும் படு கிளாமராக ஃபோட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெல்லாம் பாப்புலரான இவர், முன்னதாக சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்..
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாப்பாத்திரத்தில் நடித்து “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே மிகப் பிரபலமானவர்.
இருப்பினும் பிக்பாஸே இவரை பயங்கர பாப்புலராக்கியது.. மாடலாகவும் இருந்துவரும் ரேஷ்மா, எப்போதும் ஹாட் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் அந்தப் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஆனால் தற்போது 80 களில் கொடிகட்டி பறந்த நடிகைகளின் படங்களை ரிகிரியேட் செய்து அந்தப் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.. முதலில் நடிகை ஷோபாவை கண் முன் நிறுத்தும் வகையில் அழகான புகைப்படங்களை பதிவிட்டார்.
தற்போது தனது நடிப்புத்திறமையால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நடிகை பூர்ணிமா பாக்யராஜின் கேரக்டரை ரீகிரியேட் செய்திருக்கிறார்.. அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன..