×

ஜீசஸ் என் ஃபிரண்ட் தான்… மூக்குத்தி அம்மன் படத்தின் அசத்தலான ஸ்னீக் பீக்!

போலி கிறிஸ்தவ ஆசாமிகளை தோலுரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. உலகளவில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் நாளை தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை RJ பாலாஜி, NJ சரவணன் இருவரும் இயக்கியுள்ளனர். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். இப்படத்தில் RJ பாலாஜியும் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஊர்வசி, மௌலி,அஜய்
 

போலி கிறிஸ்தவ ஆசாமிகளை தோலுரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. உலகளவில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் நாளை தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை RJ பாலாஜி, NJ சரவணன் இருவரும் இயக்கியுள்ளனர்.

இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். இப்படத்தில் RJ பாலாஜியும் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஊர்வசி, மௌலி,அஜய் கோஷ், ஸ்ம்ருதி வெங்கட், மது, அபிநயா, மனோபாலா, மயில்சாமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.

தற்போது இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. போலி கிறிஸ்தவ ஆசாமிகளை தோலுரிக்கும் வண்ணம் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த நவீன காலத்தில் அம்மன் நேரடியாக இங்கு வந்தால் என்னென்ன நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்து மக்களுக்கு விருந்தளிக்கின்றனர் படக்குழுவினர்.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஆர்ஜே பாலாஜி “மூக்குத்தி அம்மனின் தரிசனம் நாளை காலை முதல் ⁦@DisneyplusHSVIP⁩ யில்..!!! கிருப… கிருப… கிருப.” என்று தெரிவித்துள்ளார்.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.