×

விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியின் ரகசிய நிச்சயதார்த்தம்… வைரலாகும் புகைப்படம்!

விக்னேஷ் சிவன், நயன்தரா ஜோடி ரகசிய நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கோலிவுட்டில் பதில் கிடைக்காமல் இருந்து வரும் பல கேள்விகளில் முக்கியமானது நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது? என்பது தான். கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக மாறி பல வெற்றிகளைக் கண்ட பின்னரும் இன்னும் நயன்தாரா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என்று சொல்லலாம். இந்த காதல் ஜோடி பாண்டிச்சேரி முதல் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் வரை காதல் பறவைகளாக சுற்றித்
 

விக்னேஷ் சிவன், நயன்தரா ஜோடி ரகசிய நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கோலிவுட்டில் பதில் கிடைக்காமல் இருந்து வரும் பல கேள்விகளில் முக்கியமானது நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது? என்பது தான்.

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக மாறி பல வெற்றிகளைக் கண்ட பின்னரும் இன்னும் நயன்தாரா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என்று சொல்லலாம்.

இந்த காதல் ஜோடி பாண்டிச்சேரி முதல் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் வரை காதல் பறவைகளாக சுற்றித் திரிந்தார்கள். 5 வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர்.

கோலிவுட்டின் இந்த ட்ரெண்ட் ஜோடி எப்போது மணம் முடிக்கப்போகிறார்கள் என்று தான் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். இவர்கள் புகைப்படங்கள் வெளியானாலே அவை தான் அடுத்த இரண்டு நாட்களுக்கு தலைப்பு செய்தி.

தற்போது விக்னேஷ் சிவன் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் நெஞ்சில் கை வைத்துள்ளார். முக்கியமாக கையில் மோதிரம் அணிந்துள்ளார். விரலோடு உயிர் கூட சேர்த்து என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். எனவே இருவரும் நிச்சயம் செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்!