×

செல்வராகவன் பட அறிவிப்பை வெளியிடும் தனுஷ்!

செல்வராகவன் நடிக்கும் சாணிகாயிதம் படத்தின் அறிவிப்பை இன்று மாலை தனுஷ் வெளியிடுகிறார். இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு யாமினி யாகன மூர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இயக்குனராக தனது முத்திரையைப் பதித்துள்ள செல்வராகவன் தற்போது நடிகராகக் களமிறங்குவதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது
 

செல்வராகவன் நடிக்கும் சாணிகாயிதம் படத்தின் அறிவிப்பை இன்று மாலை தனுஷ் வெளியிடுகிறார்.

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு யாமினி யாகன மூர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இயக்குனராக தனது முத்திரையைப் பதித்துள்ள செல்வராகவன் தற்போது நடிகராகக் களமிறங்குவதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாணிக்காயிதம் படத்தின் அறிமுகத்தை இன்று மாலை 6 மணிக்கு தனுஷ் வெளியிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டரில் ரத்தத்துடன் கத்தி, துப்பாக்கி, போன்ற ஆயுதங்கள் காணப்படுகின்றன. எனவே படம் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.