×

டைட்டான உடையணிந்து ’டாடி மம்மி வீட்டில் இல்ல’ பாடலுக்கு நடனமாடிய சனம் ஷெட்டி…

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சனம் ஷெட்டி. ஐடி துறையில் பணியாற்றி வந்த அவர், அங்கிருந்து மாடலிங் துறையில் கால்பதித்து பிரபலமடைந்தார். பிரபல மாடலாக இருக்கும் இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார். தமிழில் அம்புலி படத்திலும், மலையாளத்தில் சினிமா கம்பெனி படத்திலும் ஒரே ஆண்டில் அறிமுகமானார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷனும், சனம் ஷெட்டியும் காதலித்து வந்தனர். இருவரும் ஏற்கெனவே நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருந்த நிலையில்,
 

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சனம் ஷெட்டி. ஐடி துறையில் பணியாற்றி வந்த அவர், அங்கிருந்து மாடலிங் துறையில் கால்பதித்து பிரபலமடைந்தார். பிரபல மாடலாக இருக்கும் இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.  தமிழில் அம்புலி படத்திலும், மலையாளத்தில் சினிமா கம்பெனி படத்திலும் ஒரே ஆண்டில் அறிமுகமானார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷனும், சனம் ஷெட்டியும் காதலித்து வந்தனர். இருவரும் ஏற்கெனவே நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருந்த நிலையில்,  தர்ஷன், ஷெரின் காதல் கிசுகிசு விவகாரம் சனம் ஷெட்டியின் வாழ்க்கையில் பூதாகரமாக வெடித்து. தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சனம் ஷெட்டி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

புகாரால் கடுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து இருவரும் பிரேக் அப் செய்துவிட்டு  தங்களது கெரியரை பார்க்கத் தொடங்கினர்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் சனம் ஷெட்டி, சமூக வலைதளங்கள் வழியாக சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். சீன செயலிகளை புறக்கணியுங்கள், சாத்தான்குளம் ஜெயரஜ் பென்னிக்ஸ் மரணம் போன்ற பிரச்னைகள் குறித்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இன்று சமையல் செய்துகொண்டே நடனமாடும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்..
டாடி மம்மி வீட்டிலில்ல பாடலுக்கு அலுங்கி குலுங்கி நடனமாடும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..