×

மன்னனாக அவதாரம் எடுத்த சந்தானம்…. 3 வேடங்களில் உருவாகும் பிஸ்கோத்..

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து, தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம்.. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் சந்தானம் அடுத்து, சர்வர் சுந்தரம், டிக்கிலோனா ஆகிய படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.. இவர் தற்போது இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா நடித்துள்ளனர். இந்தப்படத்தில் சந்தானத்தின் பாட்டியாக சௌகார் ஜானகி நடித்திருக்கிறார். இது அவருக்கு 400
 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து, தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம்.. அடுத்தடுத்து  பல படங்களில் நடித்து வரும் சந்தானம் அடுத்து,  சர்வர் சுந்தரம், டிக்கிலோனா ஆகிய படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்..

இவர் தற்போது இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா நடித்துள்ளனர்.  இந்தப்படத்தில் சந்தானத்தின் பாட்டியாக சௌகார் ஜானகி நடித்திருக்கிறார். இது அவருக்கு 400 ஆவது படமாகும்..  மேலும் ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மசாலா பிக்ஸ் மற்றும் எம். கே. ஆர். பி. புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் சந்தானம் மூன்று  வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு கேரக்டர் பிஸ்கட் தொழிற்சாலையில் பணிபுரியும் நபர் என்றும்,  படத்தின் டிரைலர் விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது சந்தானத்தின் மற்ற கேரக்டர்கள் குறித்த அப்கேட் கிடைத்துள்ளது. இந்த படத்தின் ஒரு பகுதியில் ராஜாவாக நடித்திருக்கிறாராம்.  ஏற்கனவே இயக்குநர், பிஸ்கோத் படத்தில் வரலாற்று காட்சிகள் 30நிமிடங்கள் வரை வரும் என்று கூறியிருந்தார். எனவே சந்தானம் 18ம் நூற்றாண்டில் வரும் ராஜசிம்கா என்ற ராஜாவாக நடித்துள்ளதாகவும் , அவருக்கு ராணியாக தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம்பெறும் காட்சிகள் வரும் என்வும், மூன்றாவது பகுதியாக இக்கால காட்சிகள் அமைந்திருக்குமாம்.. இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும் என்றும், மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக பிஸ்கோத்  இருக்கும் எனவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.