×

இணையத்தைக் கலக்கும் இரு பயில்வான்களின் ஜிம் புகைப்படம்!

சரத்குமாரும் சோனு சூட்டும் ஜிம்மில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சரத்குமார், சோனு சூட் இருவருமே கம்பீரமான கட்டுடல் கொண்டவர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். சரத்குமார் அப்போதிலிருந்து இப்போது வரை தனது வலிமையான உடலை பாதுகாத்து வருகிறார். சோனு சூட் இந்த ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு பல உதவிகள் செய்து ரியல் ஹீரோவாகவே போற்றப்பட்டார். முக்கியமாக ஊரடங்கால் சொந்த ஊர் செல்லமுடியாமல் சிக்கித் தவித்த புலம்பெயர் பலர் தங்கள் சொந்த ஊர் செல்ல உதவியது
 

சரத்குமாரும் சோனு சூட்டும் ஜிம்மில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சரத்குமார், சோனு சூட் இருவருமே கம்பீரமான கட்டுடல் கொண்டவர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். சரத்குமார் அப்போதிலிருந்து இப்போது வரை தனது வலிமையான உடலை பாதுகாத்து வருகிறார். சோனு சூட் இந்த ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு பல உதவிகள் செய்து ரியல் ஹீரோவாகவே போற்றப்பட்டார்.

முக்கியமாக ஊரடங்கால் சொந்த ஊர் செல்லமுடியாமல் சிக்கித் தவித்த புலம்பெயர் பலர் தங்கள் சொந்த ஊர் செல்ல உதவியது தான்.

தற்போது சரத்குமார் சோனு சூட்டை ஜிம்மில் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் “அதிகாலை 5.30 மணிக்கு ஜிம்மிற்குசெல்வது போன்ற சிறந்தது ஒன்றும் இல்லை, நீண்ட காலத்திற்குப் பிறகு என் அன்பான நண்பரைச் சந்தித்தேன். லாக்டவுன் காலத்தில் போது அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் செயல்களையும் பாராட்டினேன். உங்களுக்குத் தலைவணங்குகிறேன் நண்பா ” என்று தெரிவித்துள்ளார் .

சரத் குமாரின் இந்த பதிவை மேற்கோள்காட்டிய ராதிகா “மனதளவிலும் உடலளவிலும் உறுதியாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.