×

சரவணா ஸ்டோர்ஸ் அதிபருக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை…

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினா பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளி கடைகளுக்கு மக்களிடையே பெரிய விளம்பரம் தேவையில்லை. இந்த கடைகளை நிர்வகித்து வருபவர் அருள். சரவணா ஸ்டோர்ஸ் அதிபரான இவர், தனது கடைகளின் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்துள்ளார். அருள், தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரண்டு இயக்குனர்கள்
 

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினா பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளி கடைகளுக்கு மக்களிடையே பெரிய விளம்பரம் தேவையில்லை. இந்த கடைகளை நிர்வகித்து வருபவர் அருள். சரவணா ஸ்டோர்ஸ் அதிபரான இவர், தனது கடைகளின் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்துள்ளார். அருள், தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரண்டு இயக்குனர்கள் இணைந்து இயக்கி வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹீரோயின் யார் என்று தெரியாமல் இருந்து வந்தது. தற்போது அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாலிவுட்டில் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4 போன்ற படங்களில் நடித்துள்ளார். அறிவியலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் நடிகை ஊர்வசி, ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.