×

விரைவில் உங்களை சந்திப்பேன்… பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ‘சிம்பு’ கொடுக்கும் சர்ப்ரைஸ் !

மாநாடு படத்தின் டீசர் எனது பிறந்தநாளில் வெளியிடப்படும் என நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். ஈஸ்வரன் படத்தின் வெற்றியையடுத்து நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மாநாடு படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மாநாடு படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு
 

மாநாடு படத்தின் டீசர் எனது பிறந்தநாளில் வெளியிடப்படும் என நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.

ஈஸ்வரன் படத்தின் வெற்றியையடுத்து நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மாநாடு படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து மாநாடு படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு, வணக்கங்கள் என ஆரம்பிக்கும் அந்த கடிதத்தில், எத்தனை தடைகளை கடந்து வந்தாலும்… என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு. அதுதான் நான் அடுத்தடுத்து படங்கள் தருவதற்கும், உடல் எடையை குறைத்து உத்வேகமானதற்கும் மிக முக்கிய காரணம் என்று சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா காலகட்டத்திற்கு வெகுவிரைவாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் படத்திற்கு பெரிய வரவேற்பை கொடுத்தீர்கள் என்றும், வெற்றிபெற செய்தீர்கள் என்றும், உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று அவர் அந்த கடிதத்தல் கூறியுள்ளார்.

உங்கள் அன்பிற்கும் நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன் எனது பிறந்தநாளன்று நான் உங்களோடு இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சில முன் தீர்மானங்கள் ஊரில் இல்லை. வெளியூர் செல்கிறேன், என் குடும்பத்தினர் வந்து வீட்டு முன்பாக இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன்.

இதையடுத்து மாநடு படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில், நாம் சந்திப்போம். ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்த நாளன்று மாநாடு டீசர் வெளியாகும். மகிழுங்கள் நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமாக ஆண்டாக இருக்கும் என்று சிம்பு ரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.